அதிகாலை உடலுறவு
அதிகாலை உடலுறவு:-
தனியாகவோ அல்லது உங்கள் பார்ட்னருடனோ உடலுறவில் ஈடுபடுவது பல உடலியல் மற்றும் நல்வாழ்வு சார்ந்த நற்பயன்களைத் தரும்.
குறிப்பாக மாதவிடாய்க்கு முன்பான PMS அறிகுறிகளைக் குறைத்தல் மற்றும் நல்ல தூக்கம் உள்ளிட்ட பயன்களைத் தரும். அதிலும் குறிப்பாக அதிகாலை செக்ஸ் உங்களுக்கு கூடுதல் எனர்ஜியைக் கொடுக்கும் என்கிறார்கள் செக்ஸ் வல்லுநர்கள்.
"காலையில் உடலுறவு கொள்வது உங்களுக்கு ஆக்ஸிடோசின் என்கிற ஹார்மோனை வெளியிடுவதற்கு காரணமாக இருக்கலாம், மேலும் இது உங்களது சமூக உறவை மேம்படுத்தும் உங்கள் பார்ட்னருடனான நெருக்கத்தையும் அதிகரிக்கும்" என்கிறார்கள் அவர்கள்.
காலையில் உடலுறவு கொள்வதை (அல்லது நாளின் வேறு எந்த நேரத்திலும்) பரிந்துரைக்க அறிவியல் பூர்வமான ஆய்வு முடிவுகள் எதுவும் இல்லை ஆனால் உடலுறவின் மூலம் இதய நோய் ஏற்படுவது, மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவை ஏற்படுவது ஆகியவை தடுக்கப்படுவதாகவும் அதனால் மக்கள் நாள் முழுவதும் உற்சாகமாக உணர்வதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்..
காலை உடலுறவின் நன்மைகள் சில...
1. அதிகாலை செக்ஸால் காலையில் எழுந்திருப்பது மிகவும் இயல்பாக எவ்வித அயற்சியும் இல்லாமல் இருக்கும். உடலுறவினால் மகிழ்ச்சிக்கான ஹார்மோனான டோபமைன் சுரக்கும் இது தூக்க சுழற்சியை சீராக்கும். சரியான நேரத்தில் தூங்குவது உடலை புத்துணர்வாக்கும்
2. உங்கள் நாளைத் தொடங்குவதற்கும் உங்கள் பார்ட்னருடனான பிணைப்பை அதிகரிப்பதற்கும் தேவையான அத்தனை ஹார்மோன்களும் சுரக்கும். உங்களது செக்ஸுக்கான தூண்டுதல் நோர்பைனெப்ரைன் என்கிற ஹார்மோனைச் சுரக்கச் செய்கிறது. அது நம் இதயத்திலிருந்து பிறப்புறுப்புகளுக்கான ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மேலும் கட்டியணைக்கத் தூண்டும் ஹார்மோனான ஆக்ஸிடோசினையும் சுரக்கச் செய்கிறது.
3. உடலுறவின் போது நீங்கள் கவனத்துடன் இருக்க உதவுகிறது. நாள் முழுதும் பல்வேறு பணிகளில் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு பல்வேறு சிந்தனைகள் இருக்கலாம். அத்தனைச் சிந்தனைகளையும் கொஞ்சம் தள்ளிவைத்து அந்த நொடியில் மட்டும் கவனம் செலுத்தும் இயல்பைக் கொண்டுவருகிறது.
4. உங்கள் நாளை ஆற்றலுடன் தொடங்க உதவுகிறது. அதனால் நாள் முழுவதும் முழு எனர்ஜியுடன் இருக்க உதவுகிறது.
5. உடலுறவு என்பது ஒருவகையில் உடற்பயிற்சி. உங்கள் உடலின் கலோரியைக் காலையிலேயே குறைக்க உடலுறவு உதவுகிறது. நீங்க உடலுறவில் தீவிரமாக இயங்கும்போது வியர்வை ஏற்பட்டு அதன் மூலமாக உங்கள் உடலின் தேவையற்ற கலோரிகளை அது குறைக்கிறது.
6. உடலுறவு என்றாலே இரவில்தான் வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற ஒரு பழக்கத்தை இது மாற்றுகிறது. மேலும் அதிகாலை மூளைச் சுறுசுறுப்பாக வேலை செய்யும் நிலையில் உடலுறவில் புதிய சில நுணுக்கங்களை இயல்பாகவே நடைமுறையில் கொண்டு வர உங்களுக்கு யோசனை தோன்றும். இரவில் அயர்ச்சியுடன் வீட்டுக்கு வந்த பிறகு உடலுறவு கொள்ளும் ஒரு அயர்வான சுவாரசியமற்ற சூழலை இது மாற்றும்."
Comments
Post a Comment